சென்னையைச் சேர்ந்தவர் நடிகை ரெஜினா கேசண்ட்ரா. தமிழில் 2005-ல் நடிகர் பிரசன்னா-வின் ’கண்டநாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து, அழகிய அசுரா படத்தில் நடித்தவர் 2010 ஆம் ஆண்டு “சூர்யகாந்தி” என்கிற தெலுங்கு படம் மூலம் நாயகியானார்.
பின், சிவகார்த்திகேயன் மற்றும் விமல் நாயகர்களாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் மூலம் தமிழில் நாயகியானார்.
தொடர் வரவேற்பு :-
அதனைத் தொடர்ந்து “ராஜதந்திரம் இமைக்கா நொடிகள், மாநகரம்” என அடுத்து வெற்றி படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் ரெஜினா பிரபலமானார்.

தெலுங்கு சினிமா-னா கவர்ச்சி..!
தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு நோ! சொன்ன ரெஜினா, தெலுங்கு சினிமா என்றால் கவர்ச்சிகளை ரசிகர்களுக்கு வாரி வழங்கினார்.
“ஐட்டம் சாங் என்றாலும், டூயட் பாடல்” என்றால் கவர்ச்சி ஆட்டம் போட்டு, அதற்கு தகுந்தாற்போல் சம்பளத்தை கனிசமாக வாங்கிக் கொண்டார் நடிகை ரெஜினா.

தற்போது ரெஜினா கிளாமர் ஃபோட்டோ ஷூட் ஒன்றை நடத்தி, அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆகி வருகிறது.



