சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 26) சவரனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் 1,03,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. நேற்று (டிசம்பர் 25) தங்கம் விலை கிராமுக்கு, 20 ரூபாய் உயர்ந்து, 12,820 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு, 160 ரூபாய் அதிகரித்து, 1,02,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இந்த நிலையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 26) சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 1,03,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,890க்கு விற்பனையகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் .254 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிலோவுக்கு 9 ஆயிரம் ரூபாய் அதிகரித்து, ஒரு கிலோ 2 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
