நமது நாட்டில் குடியிருப்போர் சங்கம் என்பது ஒரு பதிவு பெற்ற அமைப்பு. அதற்கு பல்வேறு சட்டவிதிகளும் துணை விதிகளும் பொருந்தும். இதில் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு சந்தா வசூலிப்பது, அபராதங்கள் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்கள் உண்டு.
அதனால், இந்த கணக்கை நடப்பு கணக்காகவே வங்கிகள் கருதும். உங்கள் விஷயத்தில் அது தான் நடந்திருக்கிறது. அந்த குறிப்பிட்ட வங்கி உங்களை அழைத்து இந்த விபரத்தை சொல்லிவிட்டு, பின்னர் நடப்பு கணக்காக மாற்றியிருக்கலாம். வழக்கம்போல், அவர்களுக்கு தலைக்குமேல் வேலை!
அலுவலகத்தில் எனக்கு 3 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு உள்ளது. நான் தனியார் காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் ரூபாய் 3 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு எடுத்துள்ளேன். அதோடு 7 லட்சம் ரூபாய் வரை கூடுதல் போனஸ் சேர்ந்துள்ளது. ஏதேனும் அவசரம் ஏற்பட்டால், இந்த மொத்த 10 லட்சத்தையும் நான் மருத்துவத்துக்கு பயன்படுத்தலாமா?
மருத்துவ காப்பீட்டில் பல்வேறு விதமான போனஸ்கள் கொடுக்கப்படுவதுண்டு. பொதுவாக, எந்தவிதமான கிளெய்ம்களும் கோரப்படவில்லை எனில், ‘நோ கிளெய்ம் போனஸ்’ வழங்கப்படும். முதலாண்டு 25 சதவீதமும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியாக எந்த கிளெய்ம்களும் இல்லையென்றால், கூடுதலாக 10 சதவீதமும் வழங்கப்படும்.
அதாவது இந்த போனஸ்கள், காப்பீட்டு தொகையோடு சேரும். உங்கள் விஷயத்தில் 10 லட்சம் ரூபாய் வரை நீங்கள் கிளெய்ம் செய்வதற்கு வாய்ப்புண்டு.