ஒன்பதாவது படிக்கும் என் மகனின் மேற்படிப்புக்காக அஞ்சலக தொடர் வைப்பு திட்டத்தில், மாதம் 5,000 ரூபாயை, கடந்த ஆகஸ்டில் இருந்து சேமித்து வருகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு திட்டமிட்டுள்ளேன். இந்த முறையில் சேமிப்பது சரி வருமா; அல்லது, மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி., முறையை தேர்ந்தெடுக்கலாமா? எஸ்.ஐ.பி., என்றால், எந்த வகையான வழி முறையை தேர்ந்தெடுப்பது?
அஞ்சலக ஆர்.டி.யில் 6.70 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில், தோராயமாக ஆண்டு ஒன்றுக்கு 12 முதல் 14 சதவீதம் வரை வளர்ச்சி கிடைக்கும்.
முடிந்தால் இன்னொரு 5,000த்தை கூடுதலாகச் சேமிக்க முடியுமா என்று பாருங்கள். முதல் 5,000த்தை அஞ்சலக ஆர்.டி.யிலும், இன்னொரு 5,000த்தை பங்குச் சந்தை சார்ந்த ‘பிளெக்ஸிகேப்’ மியூச்சுவல் பண்டு திட்டங்களிலும் எஸ்.ஐ.பி., முறையில் சேமித்து வாருங்கள்.