கடந்த நிதியாண்டின் ஆறு மாதங்களில், 25 டன் தங்கத்தை ரிசர்வ் வங்கி வாங்கி சேமிப்பில் வைத்துள்ளது என்று பத்திரிகையில் படித்தேன். ரிசர்வ் வங்கி எதற்கு டன் கணக்கில் தங்கத்தை வாங்கி வைக்க வேண்டும்?
நம் ரிசர்வ் வங்கி, 2017 முதலே ஏராளமான தங்கத்தை வாங்கி சேமித்து வருகிறது. அது ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. ரிசர்வ் வங்கி பல்வேறு நாடுகளின் நாணயங்களிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்து, நம் நாட்டின் சேமிப்பை பெருக்கியுள்ளது.
இந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள், பின்னர் அதிபர் விதித்த இறக்குமதி வரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், சர்வதேச நாணயங்களின் மதிப்பில் ஏற்ற – இறக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவற்றை சமாளிப்பதற்காகவே கூடுதலாக தங்கத்தை வாங்கி சேமித்து வருகிறது நம் நாடு.