ஜி.எஸ்.டி.,யில் என்ன பிரச்னை?(26)

குற்றச்சாட்டுகள் மற்றும் தீர்வுக்கான யோசனைகள் குறித்து வணிகர்கள் உள்ளிட்ட வரி செலுத்துவோர் எவரும் எழுதலாம் என்ற, ‘தினமலர்’ அறிவிப்புக்கு நல்ல வரவேற்பு; நுாற்றுக்கணக்கான கடிதங்களை எழுதி குவித்துவிட்டனர். அதன்விவரம், ‘தினமலர்’ இதழில் இப்பகுதியில் வெளியாகும்.

மருந்துப் பொருட்களுக்கு 12 சதவீத ஜி.எஸ். டி., விதிக்கப்படுகிறது. இது மிகவும் அதிகம். ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலைக்கு உகந்ததல்ல.

குறிப்பிட்ட சில மருந்துகள் மீதான வரி நீக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. எனினும், மருந் துகள் அனைத்துமே இன்றியமையாதவைதான் என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடி யாது. உணவு, உடை, உறைவிடம் இவற் றோடு மருந்துகளும் சாமானிய மக்களின் அத்தி யாவசிய பட்டியலில் உள்ளது.

மருந்துப் பொருட்கள் மீதான வரி என்பது நோயாளிகள் மீதான வரி என்பதே யதார்த்த நிலை. நடுநிலையுடன் ஆராய்ந்தால், மருந்துகள் மீதான வரி எவ்வகையிலும் நியாயமற்றது என் பது தெளிவாகும். மருந்துகளின் மீதான வரியை முற்றிலும் நீக்கினால் மக்கள் நல் வாழ்வில் அது ஒரு மைல் கல்லாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *