வங்கிக் கடனை வசூல் செய்யும் கலெக்ஷன் ஏஜென்டுகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதை இங்கு விரிவாக பார்ப்போம்!
- காலை 8 மணிக்கு முன்னாலும் இரவு 7 மணிக்கு பின்னாலும் கடனை திரும்பக் கேட்டு வாடிக்கையாளருக்கு கால் செய்ய கூடாது.
- கடன் பெற்றவரை தவிர அவர் வீட்டினர் யாரையும் தொடர்பு கொள்ளக் கூடாது.
- வாடிக்கையாளர் எங்கே வரச் சொல்கிறாரோ அங்குதான் அவரை சந்திக்க வேண்டும்.
- கவுரவமான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- மிரட்டலோ தவறான வார்த்தைகலோ பயன்படுத்தப்படவே கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நெறிமுறைகள் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வரும் என ஆர்பிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
