ஸ்ரீஹரிகோட்டாவில் தயார் நிலையில் பாகுபலி ராக்கெட்!

ஸ்ரீஹரிகோட்டாவில் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நவம்பர் 2-ம் தேதி பாகுபலி ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்திய ராணுவத்திற்காக அடுத்த வாரம் ஒரு சிறப்பு தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள், சிஎம்எஸ்-03 என்று அழைக்கப்படுகிறது. நவம்பர் 2- ம் தேதி பாகுபலி என்று செல்லமாக அழைக்கப்படும் எல்விஎம்-3 ராக்கெட் மூலம் 4 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்ட ஜிசாட்-7 ஆர் என்று அழைக்கப்படும் சிஎம்எஸ்-03 என்ற ராணுவ தகவல் தொடர்பு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்டு செயற்கைக்கோளுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏவுதளத்திற்கு முந்தைய நடவடிக்கைகளாக ராக்கெட் கடந்த 26-ம் தேதி ஏவுதளத்திற்கு நகர்த்தப்பட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்டப்பணியான கவுண்ட்டவுன் நவம்பர் 1-ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *