தாய்மார்களுக்கு காலையில் ஓர் இன்ப அதிர்ச்சி : திடீர் பரிசாக மகளிர் உரிமைத் தொகை ரூ.5,000

மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 ஆக பயனார்களின் வங்கி கணக்கில் வரவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்கிலும் இன்று காலை ₹5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. பயனர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

தேர்தல் நெருங்குவதால் முன்கூட்டியே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை சேர்த்து ரூ.3,000 மற்றும் கோடைகால சிறப்புத் தொகுப்பாக ரூ.2,000 என சேர்த்து ரூ.5,000 என வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1.31 கோடி உரிமைத் தொகை பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசின் இந்த நடவடிக்கை மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் திமுக அரசு மீண்டும் ஆட்சி அமைக்கும் போது மக்களின் உரிமைத்தகையான ஆயிரம் ரூபாயை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையாக முதல் பஸ் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *