நடப்பு ரடி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அமெரிக்காவை 32 ரன்களில் வீழ்த்தி மீண்டும் வெற்றியை பாகிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது.
‘குரூப் – ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் இடையிலான லீக் ஆட்டம் இலங்கை கொழும்பில் நடைபெற்றது.
டாஸ் வென்ற அமெரிக்க அணி முதலில் பந்து வீசியது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து, 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அமெரிக்க அணி விளையாடியது. அமெரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதன் மூலம் பாகிஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த தொடரில் அந்த அணிக்கு இது 2வது வெற்றியாகும். முன்னதாக, முதல் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தான் வீழ்த்தி இருந்தது.

அடுத்த இந்தியா உடன் முதல் மோதல்
இதையடுத்து, வரும் 15ஆம் தேதி அன்று இலங்கை கொழும்பில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணியுடன் பாகிஸ்தான் அணி மோத உள்ளது.
