சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில், காலையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது.
பொதுவாக, டிசம்பர், ஜனவரி, மாதங்களில், தமிழகத்தில் கடுமையான பனிப்பொழிவு காணப்படும். பிப்ரவரி மாதம் தொடக்கத்தில், பனிப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும்.
இந்தவழக்கத்துக்கு மாறாக, சென்னை, விழுப்புரம், செங்கல்பட்டு உட்பட வட மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக, அதிகாலையில் லேசான பனிப்பொழிவு காணப்படுகிறது.
சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்துார், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில், அதிகாலைல வேளையில் மிதமான பனிமூட்டம்காணப்படும் என, சென்னை வானிலை ஆய்வுவ மையம், சில நாட்களாக அறிவித்திருந்தது.
அதனபடி, சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் உள்ள வாகனங்கள், பொருட்கள், நபர்களை பார்க்க முடியாத நிலைமை ஏற்பட்டது.
இதனால், சாலைகளில் செல்வோர், வாகனங்களைள மெதுவாக இயக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். காலை நேரங்களில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பகுதிகளில் இதேநிலை தான் உள்ளது.
