பாரதியாரின் கவிதை மூலம் பதில் சொல்ல மாணிக்கம் தாகூர் : திமுக – தமிழக காங்கிரஸ் இடையே வலுக்கும் மோதல்

“நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..!” என்ற பாரதியாரின் கவிதையை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தனது ‘எக்ஸ் தள’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்குறி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஒரு பக்கம் ராகுல் காந்தியும், தமிழக முதல்வரும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒற்றுமையாக உள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கும், திமுகவினருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாகவும் பேசப்படுகிறது.

தமிழக காங்கிரஸ் தலைவராக உள்ள செல்வப் பெருந்தகை திமுகவுடன் கூட்டணி அமைய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் நிர்வாகியுமான மாணிக்கம் தாகூர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகித்தால் “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு” என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் இடையே   மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இன்று மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ..!” என்ற பாரதியாரின் கவிதையை பதிவிட்டுள்ளார்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாணிக்கம் இது போன்ற செயலால் திமுகவினரும் தமிழக காங்கிரசும் இடையே அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *