“மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை என்று யாரை ஏமாற்றலாம் என்று முதல்வர் எண்ணுகிறார்” என்று தமிழக பாஜக நிர்வாகியான அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

மாடிப்படி வீரர்களுக்கு அரசு வேலை?
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது, ஜல்லிக்கட்டு மைத்தானத்தில் வைத்தே, மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்ற வாக்குறுதியையும் அறிவித்தார்.

தற்போது இதுதான் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது. முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும்! அதே சமயத்தில் எதிர்ப்பும்! எழுந்துள்ளது.
மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை என்பது ஏமாற்று வேலை என்று தமிழக பாஜக நிர்வாகியான அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

யாரை ஏமாற்றுகிறார் முதல்வர்?
இதுகுறித்து அவர் கூறியுள்ளது,
“மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை என்பது மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பு என்றும், ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போருக்கு மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை என 2021ல் திமுக வாக்குறுதி அளித்ததை சுட்டிக்காட்டினார்.
ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு ரூபாய்கூட ஜல்லிக்கட்டு காளைக்கு முதல்வர் தரவில்லை என்று குற்றம்சாட்டிய அண்ணாமலை, வெற்று வாக்குறுதிகளை கொடுத்து யாரை ஏமாற்றலாம் என்று முதல்வர் எண்ணுகிறார் எனத் தெரியவில்லை” என்றார்.

நகைச்சுவையாக கலாய்த்த அண்ணாமலை
“ஜல்லிக்கட்டு காளை வளர்க்கும் ஒவ்வொருவருக்கும் தர வேண்டிய ரூ.60,000 தொகை எப்போது வரும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
‘பேரு பெத்த பேரு, தாக நீலு லேது’ என்ற தெலுங்கு பழமொழி திமுக தேர்தல் வாக்குறுதிகளுக்கு பொருந்தும் என்று அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினை நகைச்சுவையாக குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
