உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் துரைமுருகன்
87 வயதாகும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திமுகவின் பொதுச்செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
திமுகவின் மூத்த தலைவரான துரைமுருகனுக்கு வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது.
சளி, காய்ச்சல் மற்றும் வயது மூப்பு காரணமாக ஏற்படும் உடல்நலக் குறைவு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

முதலமைச்சர் சந்திப்பு:
துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி அறிந்ததும், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று நேரில் சென்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர், அவர் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தார்.
அமைச்சர் துரைமுருகன் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2 நாடுகளுக்கு முன்பு தான், திருவள்ளுவர் தினத்தில் தமிழக அரசால் அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
