பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக் கூடாது – திமுக போட்ட உத்தரவு!

பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசக்கூடாது என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் பணிகளில் கட்சிகள் மும்முரம்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, திமுக கூட்டணியில் “காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி” உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

திமுக தலைமை உத்தரவு

“இந்நிலையில், கூட்டணி , தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாக தவிர்க்குமாறு கட்சி நிர்வாகிகளுக்கு திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.

கூட்டணி குறித்து பேச வேண்டாம்!

இது தொடர்பாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்துள்ள அறிவுறுத்தலில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக்கட்சியினர் தொடர்பான கருத்துகளை கழக நிர்வாகிகள் பொதுவெளியில் விவாதிப்பதை முழுமையாகத் தவிர்த்திட வேண்டும்.

தேவையற்ற சர்ச்சைகளினால் எவ்வித பலனும் இல்லை என்பதால் ஆக்கப்பூர்வமான கட்சி பணிகளில் கவனம் செலுத்தி தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும்” இவ்வாறு கூறியுள்ளார்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *