வேலூர் : மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 75வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

குடியாத்தத்தை அடுத்த பெரிய பரவக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். 24 வயதாகும் அந்த இளைஞர், மேளம் அடிக்கும் தொழிலாளை செய்து வந்ததுடன், மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தார்.

அஜித்குமார் கடந்த 22ஆம் தேதி ஒரு வீட்டிற்கு சென்று, அங்கு தனியாக இருந்த 75வயது மூதாட்டியிடம் செலவுக்கு பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் மூதாட்டி பணம் இல்லை என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் போதையில் மூதாட்டியை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அஜித்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடலில் காயங்களுடன் இருந்த மூதாட்டியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்று விசாரித்த போது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்து. இதையடுத்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகன்  அளித்த புகாரியின் போரில் இளைஞர் அஜித்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 75 வயது மூதாட்டிக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாக பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *