ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி – பெண் அதிகாரி பாலியல் வன்கொடுமை

ராஜஸ்தானில் ஐடி நிறுவன சி.இ.ஓ, பெண் மேலாளரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பெண் மேலாளர் பாலியல் வன்கொடுமை

உதய்பூரில் தனியார் ஐடி நிறுவன சி.இ.ஓ ஜிதேஷ் சிசோடியா என்பவர் தனது பிறந்தநாளை தனியார் விடுதியில் தனது அலுவலக பணியாளர்களுடன் கொண்டாடினார்.

அந்த பார்ட்டியில், ஐடி நிறுவனத்தில் பணிபுரியும், பெண் மேலாளரும் விருந்தினராகக் கலந்துகொண்டார். விருந்துக்குப் பின்னர், சி.இ.ஓ காரில் அழைத்துச் சென்று, அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது

இதையடுத்து, அப்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இந்த வழக்கில் சிஇஓ ஜிதேஷ் சிசோடியா, அந்த நிறுவனத்தின் ஒரு பெண் நிர்வாகத் தலைவர் மற்றும் அவரது கணவர் மீரட்டைச் சேர்ந்த கௌரவ் சரோஹி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் பெண் மேலாளரை அழைத்து திட்டமிட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் ஐடி நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *