திருநெல்வேலி : பெட்ரோல் குண்டுவீசி திட்டமிட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டி மர்ம கும்பல் – கிராம மக்களின் போராட்டத்தால் நூற்றுக்கணக்கான போலீசார்கள் குவிப்பு

திருநெல்வேலி அருகே டீக்கடையில் 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே களக்காடு செல்லும் சாலையில் பெரும்பத்து என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள டீக்கடை ஒன்றில் நேற்று இரவு சிலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது 3 இரு சக்கர வானங்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாங்கள் எடுத்து வந்த அரிவாள் மற்றும் கொடூர ஆயுதங்களால் திடீரென தாக்குதல் நடத்தினர்.

அங்கிருத்தவர்களை சரமாரியாக வெட்டிய அவர்கள், டீக்கடை முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர்.

இந்த சம்பவத்தில் 9 பேருக்கு வெட்டு விழுந்தது. 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் லேசான காயத்துடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் கண்டித்து அப்பகுதி கிராம மக்கள் ஏர்வாடி – நாங்குநேரி முக்கிய சாலையில்  மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி பிரசன்னா குமார் மற்றும் நெல்லை சரக டிஐஜி சரவணன் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானம் படுத்தினர். சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *