அடையளாம் தெரியாது பெண் ஒருவர் உங்களுக்கு ஷேர் மார்க்கெட், டிரேடிங் பண்ண ஆர்வம் இருக்கிறதா சார்? என்று பேசி நூதன முறையில் பணமோசடியில் ஈடுபடுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, தமிழ்நாட்டில் ஆன்லைன் வழியாக பலவிதமான மோசடிகள் நடந்து வருகிறது. புதுசா..! புதுசா! நிறையவே பணமோசடி கும்பல் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
பெண்ணைப் பேச வைத்து நூதன மோசடி :-
உங்கள் செல்போன் நம்பருக்கு பெண் ஒருவர், “ஹய்! ஹலோ!” என்று பேசி, சார் உங்களுக்கு ஷேர் மார்க்கெட் பற்றி தெரியுமா?, ஷேர் மார்க்கெட்டில் டிரேடிங் பண்ண ஆசையா? கூடுதல் வருமானம் பார்க்கலாம் என்று பேசத் தொடங்குவார்கள். பிறகு, மெல்ல… மெல்ல.. நமக்கு ஆசைகளை தூண்டி.. “சார் ஐடி போட வேண்டும் முதலில் இவ்வளவு குறிப்பிட்ட தொகை பணம் செலுத்த வேண்டும்..!” என கூறுவார்கள். நாமும் பணத்தை அந்தப் பெண் அவர்கள் சொல்லும் வழியில் செலுத்தி விடுவோம்.
பெண்ணை வைத்து மோசடி :-
ஆரம்பத்தில் அந்தப் பெண் நமக்கு வாட்ஸ் அப் கால் மூலம் பேசி வருவார்கள். பிறகு ஒரு சில விஷயங்கள் சொல்வார்கள். ஆன்லைன் Zoom மீட்டிங் கூட நடத்துவார்கள். அதன் பிறகு தான் பிரச்சனையே ஆரம்பமாகும். முடிந்த அளவுக்கு நம்மிடம் பணத்தை வாங்கிக் கொண்டோ! அல்லது கணிசமான தொகையை வாங்கிக் கொண்டோ! நம்மை மறந்து விடுவார்கள் அனைத்து இணைப்பையும் உடனே துண்டித்து விடுவார்கள். இது ஒரு “ஹனி டிராப்” தான்.
எச்சரிக்கை
தற்போது நேரடியாக நம் வாட்ஸ்அப் எண்ணுக்கும், போன் நம்பருக்கும் ஒரு பெண்ணை விட்டு பேச வைத்து பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்வது வருகிறார்கள், இதில் இருந்து நாம் விழிப்புணர்வு உடன் இருக்க வேண்டும் என சைபர்கிரைம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
