எடப்பாடி பழனிசாமியின் தருமபுரி, நாமக்கல் சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரச்சார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐந்தாம் கட்ட சுற்றுப்பயணத் திட்டத்தில், 29, 30, மற்றும் 4-ம் தேதிகளில் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டு, முறையே அக்.2, 3, மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறும். வரும் அக். 2-ம் தேதி தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி தருமபுரி அரூர், அக்.3-ம் தேதி தருமபுரி, பாலக்கோடு பென்னாகரம், அக்.6 -ம் தேதி நாமக்கல், நாமக்கல் பரமத்தி வேலூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெறும்.

ஏற்கெனவே அக். 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று, நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய தொகுதிகளில் நடைபெறுவதாக அறிவித்திருந்த பிரசாரக் கூட்டம், அதே தேதியில் நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *