அதிமுக ராஜ்யசபா வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையை தேர்வு செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளையுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில் அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட்டுள்ளார்.


ஏற்கனவே 5 முறை ராஜ்யசபா எம்பியாகவும், ஒரு முறை லோச்சபா எம்பியாவும் தம்பிதுரை இருந்துள்ளார். இதேபோல் இன்னொரு ராஜ்யசபா சீட்டானது பாமகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அன்புமணி ராமதாஸ் வேட்பாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
அதேசமயம் இன்று உடன் ராஜ்யசபா தேர்தலுக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனு இன்றுடன் நிறைவடைவதால் இன்று அதிமுக சார்பில் தம்பி தெரியும் பாமக சார்பில் அன்புமணி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
