பிரிந்தவர்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என்று தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில், அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக தற்காலிக அவைத்தலைவராக கே.பி.முனுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சுமார் 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தேனி மாவட்டம், போடியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் முழுமையாக வந்தபிறகு அதுகுறித்து நான் பேசுகிறேன். தமிழ்நாடு நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் அனைவருமே பிரிந்து கிடக்கின்றன அதிமுக சக்திகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர் என்றார்.
