நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் கோயிலுக்குச் சொந்தமான 44 சென்ட் இடத்தை அபகரித்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்பட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரியும் முக அழகிரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 8) விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்கை ஏன் எதிர்கொள்ளக் கூடாது என்று மு.க.அழகிரி தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் சரியான கருத்தை தான் பிறப்பித்துள்ளது. எனவே, வழக்கை நீங்கள் அங்கே சந்திக்குமாறு கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
