7வது முறையாக நாடாளுமன்றம் செல்ல போகும் திருச்சி சிவா – திமுக சார்பில் 2 ராஜ்யசபா எம்பி வேட்பாளர்கள் அறிவிப்பு!

ராஜ்யசபா தேர்தலில் திமுக
வேட்பாளர்களாக திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிப்பு

தற்போதைய எம்பி திருச்சி சிவா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருடன் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இம்முறை ராஜ்யசபா தேர்தலில் தமிழகம் சார்பில் ஆறு பேர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

எம்எல்ஏக்கள் பிரதிநிதித்துவம் அடிப்படையில் திமுக எம்பிக்களை 4 எம்பிக்களை அனுப்ப முடியும். 4 பேரில் ஏற்கனவே ஒரு இடத்தை தேமுதிகவுக்கு அளிக்கப்பட்டுவிட்டது. எஞ்சிய 3 பேரில் ஒரு இடத்தை காங்கிரசுக்கு இன்று ஒதுக்கியது. இதுபோக மீதமுள்ள 2 இடங்களுக்கு திமுக வேட்பாளர்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திருச்சி சிவா எம்.பி – வரலாறு:-

திமுகவின் டெல்லி குரல்களில் முக்கிய நபராக விளங்கும் திருச்சி சிவா 6வது முறையாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாக உள்ளார். 1996-ல் புதுக்கோட்டை மக்களவை தொகுதியில் பெற்று முதல் முறையான நாடாளுமன்றம் சென்றார். தொடர்ந்து 2000, 2002, 2007, 2014, 2020ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவைக்கு தேர்வாகி அனுப்பப்பட்டார்.

இந்த சூழலில் திமுக துணைப் பொதுச்செயலாளராக முக்கிய பொறுப்பில் உள்ள அவருக்கு மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக 2026-ல் தற்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *