அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: ”அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்” என பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் அண்ணாமலை கூறியிருப்பதாவது: டிசம்பர் 23ம் தேதி, 2024ம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் சகோதரிக்கு மிக மோசமான, கோரமான ஒரு பாலியல் வன்கொடுமை நடந்தது நமக்கு தெரியும். 23ம் தேதி நடந்த பாலியல் சம்பவத்திற்கு 25ம் தேதி ஒரு குற்றவாளியை கைது செய்தார்கள். 25ம் தேதி காலையில் இருந்து ஒரு சாமானிய மனிதனாக நானும் பேச ஆரம்பித்தேன்.

call detail record

25ம் தேதி இரவு கைது செய்யப்பட்ட ஞானசேகரன் யார் எந்த கட்சியை சேர்ந்தவன் என்று அதையும் நாங்கள் உங்கள் முன் வைத்தோம். எல்லா அரசியல் கட்சிகளும் போராடினார்கள்.

அரசியல் பேச விரும்பவில்லை. நான் சி.டி.ஆர்., (call detail record) ஆதாரத்தின் அடிப்படையில் பேச போகிறேன். 25ம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு பல விஷயங்களை பார்த்தோம். எப்.ஐ.சி., கசிய விடப்பட்டது.

30 ஆண்டுகள் கடுங்காவல்

27ம் தேதி நான் ஒரு அறப்போராட்டத்தை முன் எடுத்தேன். சென்னை ஐகோர்ட் சிறப்பு குழு அமைத்து கண்காணித்தது. தற்போது 5 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. முக்கிய குற்றவாளியாக, ஒரே குற்றவாளியாக இருக்க கூடிய ஞானசேகரனுக்கு, 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அன்றைக்கு கேட்ட அதே கேள்வியை இன்றும் கேட்கிறோம். ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தது நம்ம எல்லோருக்கும் சந்தோஷம் தான்.

தொலைபேசி எண்

டிசம்பர் 24ம் தேதி, ஞானசேகரனை கோட்டூர்புரம் போலீஸ் அதிகாரிகள் கைது செய்கிறார்கள். பிறகு வெளியே விட்டு விடுகிறார்கள். 25ம் தேதி மாலை மீண்டும் கைது செய்கிறார்கள். ஏன் கைது செய்த பிறகு விடுதலை செய்தார்கள். இதில் யாரு எல்லாம் சம்மந்தப்பட்டு இருக்கிறார்கள். எதற்காக தி.மு.க.,வில் சில தலைவர்களுக்கு பதற்றம்?

ஆதாரங்களை எங்கு எல்லாம் அழித்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. 9042977907 என்பது தான் ஞானசேகரன் பயன்படுத்திய தொலைபேசி எண்.

இதையெல்லாம் விசாரித்தார்களா?

சம்பவம் நடந்த அன்று ஞானசேகரன் தொலைபேசி பிளேட் மோடில் இருந்ததாக அரசு வழக்கறிஞர் சொல்லி உள்ளார். 8.52 மணி வரை பிளேட் மோடில் இருந்ததை தான் சி.டி.ஆர்., சொல்கிறது.

பெண்ணை வன்கொடுமை செய்த பிறகு இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் முதலில் ஒரு போலீஸ் அதிகாரிக்கு தான் போன் செய்துள்ளார். காவல் துறை மீது நான் அதிக மதிப்பு வைத்து இருக்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த காவல் துறை அதிகாரி பெயரையும், பதவியையும், மொபைல் எண்ணையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *