சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யுடன் கூட்டணியா?- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி

தமிழக வெற்றிக் கழகத்துடன் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், * அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்ற சசிகலாவின் கருத்தை வரவேற்கிறேன். எனவே, தான் பிரிந்து கிடக்கும் சக்தியை ஒன்று சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறேன். * வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *