ஒன்றிய அரசுக்கு எதிராக முதல்வரின் கேள்விகள்? அது எப்படி..?

முதல்வர் ஸ்டாலின் ஒன்றிய பாஜக அரசுக்கும்; ஒன்றிய அமைச்சர்களுக்கும் சில கேள்விகளை முன் வைத்துள்ளார். அதனை தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் கேட்டுள்ள கேள்விகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


முதல்வர் ஸ்டாலின் கேட்ட கேள்விகள்?

  • “அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மட்டுமல்ல, நாட்டு மக்களின் நெஞ்சங்களிலும் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன.
  • ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, Washing Machine-ல் வெளுப்பது எப்படி?
  • நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?
  • ஒன்றிய அமைச்சர்களே! நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?
  • பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டை SIR ஆதரிப்பது ஏன்?
  • கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்? இதற்கெல்லாம் பதில் வருமா?
  • இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தை தொடங்குவீர்களா?” என “எக்ஸ்” தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

சமீப காலமாக பண மோசடி; ஊழல் புகார்; பாலியல் புகார்கள் போன்ற வழக்குகளில் சிக்குபவர்கள் பாஜகவில் இணைந்து பிறகு, அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் காணாமல் போய்விடுவதாக அரசியல் விட்டாரத்தில் ஒரு குற்றச்சாட்டும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *