சென்னை :- தேர்தல் பரபரப்புக்கு இடையே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பீகார் இளைஞர் கைது

சென்னை வியாசர்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பீகார்  இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு இளைஞா், சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, இருட்டான பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அந்தச் சிறுமி சப்தமிட்டபடி, அங்கிருந்து தப்பியோடினர்.

 

சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், தப்பியோட முயன்ற அந்த இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சிறுமியின் பெற்றோா், எம்கேபி நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனர்.

 

போலீஸாரின் விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது நூா் ஆலம் (28) என்பதும், மணலியில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞா் மீது, பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *