தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழா : கரூர் வட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, கரூர் வட்டத்திக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரிலுள்ள தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமி கோயில் தென் திருப்பதி என அழைக்கப்படுகிறது. திருப்பதி சென்று வழிபட முடியாதவர்கள், கரூரில் உள்ள தான்தோன்றிமலை வெங்கடரமண சுவாமியை தரிசனம் செய்து வருவது வழக்கம்.

12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், குடமுழுக்கு நடத்துவதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், இக்கோயிலுக்கான குடமுழுக்கு  வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், நாளை மறுநாள் கரூர் வட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *