தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: பாஜக பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் 3 பேர் நியமனம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இணைப் பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் ஆகிய 3 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் பூத் கமிட்டி அமைப்பு, கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு என தீவிரம் காட்டி வருகின்றன. தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விருப்ப மனுக்களை வாங்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்துள்ள பாஜக, மேலும் சில கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி மூன்று பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது. பாஜக பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர்கள் மூன்று பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும், இணை பொறுப்பாளர்களாக அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மோஹோல் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *