விமான நிலையத்தில் பரபரப்பு.. ரூ.1.15 கோடி மதிப்பிலான உயர் ரக டிரோன்கள் கடத்தல்!

வெளிநாட்டில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1.15 கோடி மதிப்பிலான  272 உயர் ரக டிரோன்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து வரும் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு உயர் ரக டிரோன்கள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாய், சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையிட்டனர்.

அப்போது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக 272 உயர் ரக டிரோன்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 1.15 கோடி ரூபாயாகும். இவற்றை கடத்தி வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு நவீன டிரோன்களை எதற்காக கோவைக்கு கடத்தி வரப்பட்டது என்று பிடிபட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *