மலையாளத்தில் அபார வெற்றியால் தமிழில் ரீமேக் : திவ்யபாரதி நடிக்கும் ‘ஆசை’

நடிகை திவ்யபாராதி நடித்துள்ள ‘ஆசை’ என்ற படம், வரும் மார்ச் 6ஆம் தேதி ரிலீசாகிறது.

மலையாள ரீமேக்

ஷிவ்மோஹா இயக்கத்தில் கதிர், திவ்யபாரதி, பூர்ணா நடித்துள்ள இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஹிட் படம், ‘இஷ்க்’. அனுராஜ் மனோகர் இயக்கத்தில் ஷான் நிகம், அன்ஷீத்தல் நடித்திருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இதன் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்தான் ‘ஆசை’ என்ற பெயரில் உருவாகி இருக்கிறது.


பாபு குமார் ஒளிப் பதிவு செய்ய, ரேவா இசையமைத்துள்ளார். இந்த “ஆசை” படத்தில் நாயகியாக நடிகை திவ்யபாரதி நடித்துள்ளார். நாயகனாக ‘பரியேறும் பெருமாள்’ பட புகழ் கதிர் நடிக்கிறார்.

ஆசை படத்தின் கதைக்கரு:

ஒரு ஜோடி இரவு நேரத்தில் காரில் செல்லும்போது, இரு நபர்களால் மறிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். மேலும், பெண்கள் மீது அரங்கேறும் அத்துமீறலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


திவ்யபாரதியின் கதாபாத்திரம்:

மலையாளத்தில் ஆன் ஷீத்தல் என்னும் மலையாள நடிகை நடித்த அழுத்தமான கதாபாத்திரத்தில் திவ்யபாரதி நடித்துள்ளார். ஒரு சாதாரண பெண்ணாக இருந்து, தனக்கு நேரும் கொடுமைக்கு எதிராக அவர் எடுக்கும் முடிவு படத்தின் முக்கிய அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *