கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி என்ற எஸ்டிபி கண்ட கட்சி தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டத்திற்கு வரவேற்பு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது.

இலக்கிய உலகின் பன்முகத்தன்மையை செழுமைப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் சிறந்த எழுத்தாளர்களுக்கு அங்கீகரிக்கும் விதமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ‘செம்மொழி இலக்கிய விருது’ என்னும் விருதை அறிவித்துள்ளார்.
அதற்கு பிரபல தமிழ் எழுத்தாளர்களும் இலக்கிய ஆறு பல்கலும் பல்வேறு கட்சியினரும் வரவேற்று பாராட்டி வருகிறார்கள். அந்த வக்கியில் தமிழ்நாடு எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் செம்மொழி இடுக்கி முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு பாராட்டி வாழ்த்துக்களுக்கு தெரிவித்துள்ளார்.

முதல்வர் அறிவிப்புக்கு SDPI கட்சி வரவேற்பு!
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம் மற்றும் மராட்டிய மொழிகளில் ஆண்டுதோறும் வெளியாகும் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் மொழி வாரியாக “செம்மொழி இலக்கிய விருது” வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

ரூ.5லட்சம் பரிசுத்தொகை
திராவிட மாடல் ஆட்சியின் தொடர்ச்சியான இந்த அறிவிப்பின்படி, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக தகுதிவாய்ந்த, புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விமர்சகர்கள் அடங்கிய தேர்வுக் குழு அமைக்கப்பட்டு, முற்றிலும் வெளிப்படையாகவும் நியாயமாகவும் தேர்வு செய்யப்படும். ஒவ்வொரு விருதுக்கும் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு இலக்கியம், படைப்பாற்றல், மொழி பன்முகத்தன்மை ஆகியவற்றை ஊக்குவிப்பதோடு, இந்தியாவின் பல்வேறு மொழிகளிடையே பரஸ்பர மரியாதை, மொழிபெயர்ப்பு, கலாச்சாரப் பரிமாற்றத்தை வலுப்படுத்தும் நோக்கத்தையும் கொண்டுள்ளது. இலக்கியம் எல்லைகளற்றது; அது மக்களை இணைக்கும் பாலமாகத் திகழ்கிறது என்பதை மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த விருது அமையும்.
இந்திய இலக்கிய உலகின் பன்முகத்தன்மையை மேலும் செழுமைப்படுத்தும் இத்தகைய தேசிய அளவிலான, உள்ளடக்கமான முன்னெடுப்பை மேற்கொண்டதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
