சென்னை : சரமாரியாக வெட்டி ரீல்ஸ் வீடியோ எடுத்த கல்லூரி மாணவர்கள் – என்ன நடந்தது..?

சென்னை வேளச்சேரியில் உணவு டெலிவரி செய்யும் இளைஞரை சரமாரியாக வெட்டி அதை “ரீல்ஸ் கொடூரம்” வெளியிட்ட கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

​பாதிக்கப்பட்ட இளைஞனின் பெயர் பிரவீன். 24 வயதாகும் அவர் சென்னை வேளச்சேரி பகுதியில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், சென்னை நேரு நகர் 2வது தெருவில் ஒரு வீட்டிற்கு உணவு வழங்கச் சென்றபோது, 2 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றது.

​தப்பியோட முயன்ற பிரவீனை அந்த கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் அவரது கை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர்.

​சரமாரியாக வெட்டி “ரீல்ஸ்” வீடியோ

​இந்தத் தாக்குதலின் போது, அந்த கும்பலில் ஒருவன் தனது செல்போனில் முழுச் சம்பவத்தையும் படம்பிடித்துள்ளான். தாக்குதல் நடத்திய சில நிமிடங்களிலேயே, அதற்கு ஒரு பிரபல ரவுடிசப் பாடலை பின்னணியில் சேர்த்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.

​தங்களை அந்தப் பகுதியில் பெரிய “தாதாக்கள்” என்று காட்டிக்கொள்வதற்காகவும், எதிராளிகளைப் பயமுறுத்துவதற்காகவும் இந்த ரீல்ஸை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

​காவல்துறை கண்காணிப்பு:

இந்த வீடியோ சில நிமிடங்களிலேயே வைரலாகி, சென்னை சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்குச் சென்றது. இதுவே அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முக்கிய ஆதாரமாகவும் மாறியது.

​கைது செய்யப்பட்டவர்கள் யார்?

​இதையடத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சூர்யா என்ற இளைஞரையும், 2 கல்லூரி மாணவர்களையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *