குயிக் விட்டல் ஏஐ கருவி மூலம் வெறும் 20 விநாடிகளில் முழு உடல் பரிசோதனையை மேற்கொள்ளும். மேலும் இரத்த பரிசோதனைக்கு உங்கள் உடலில் இருந்து ரத்தம் எடுக்க தேவையில்லை. இவை அனைத்தும் ஏஐ (AI) மூலம் சாத்தியமாகியிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வரவு தகவல் தொழிநுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் பிரம்மிக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மருத்துவ துறையிலும் அப்படியொரு புதுவித மாற்றத்தை உருவாக்கியுள்ளது. ஊசியில்லாமல் ரத்தம் இல்லாமல் நோய் பாதிப்பு கண்டறிதலை ஏஐ சாத்தியமாக்கியுள்ளது.
குயிக் வைட்டல்ஸ் என்ற புதிய செயலி முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலமாக ரத்தப் பரிசோதனை செய்வதை சாத்தியமாக்கியுள்ளது. இந்த கண்டுபிடிப்பு இந்தியா முழுவதும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ரத்த சோகைக்கான ஆரம்பகால சுகாதார பரிசோதனையை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.