பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு ஸ்வியாடெக், ஸ்விடோலினா, சபலென்கா, அல்காரஸ் உள்ளிட்டோர் முன்னேறினர்.
பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக், கஜகஸ்தானின் ரிபாகினா மோதினர். இதில் ஸ்வியாடெக் 1-6, 6-3, 7-5 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.