பாரிஸ்: பிரெஞ்ச் ஓபனில் தனது 100வது வெற்றியை பதிவு செய்த செர்பியாவின் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் கேமிரான் நோரி மோதினர். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 6-2, 6-3, 6-2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். பிரெஞ்ச் ஓபனில் 100வது வெற்றியை பதிவு செய்த 2வது வீரரானார் ஜோகோவிச். ஏற்கனவே ஸ்பெயினின் நடால் 112 போட்டியில் வெற்றி பெற்றிருந்தார்.