லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற இங்கிலாந்து அணி, 2-0 என தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்தது.
இதற்காக இரு அணி வீரர்களும் ஓட்டலில் இருந்து இரு பஸ்சில், 3.5 கி.மீ., துாரத்தில் உள்ள ஓவல் (தெற்கு லண்டன்) மைதானத்துக்கு கிளம்பினர். அப்போது போக்குவரத்து நெரிசலில் பஸ் சிக்கிக் கொண்டது.