அரையிறுதியில் சபலென்கா-ஸ்வியாடெக் * பிரெஞ்ச் ஓபனில்…

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிசில் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் உலகின் ‘நம்பர்-1’, பெலாரசின் சபலென்கா, 8வது இடத்திலுள்ள சீனாவின் குயின்வென் ஜெங்கை எதிர்கொண்டார். முதல் செட் இருவரும் சமபலத்தை வெளிப்படுத்த 6-6 என சமன் ஆனது. பின் நடந்த ‘டை பிரேக்கரில்’ சபலென்கா 7-6 என வசப்படுத்தினார். தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றினார். முடிவில் சபலென்கா 7-6, 6-2 என நேர் செட்டில் வெற்றி பெற்றார். 2023க்குப் பின் மீண்டும் இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *