சேலம்:
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க, லெவல் அப் என்ற பெயரில் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆங்கிலம் கற்கும் திறனில், தனியார் பள்ளிளுடன் போட்டிபோட முடியாத நிலையில் உள்ளதே, முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் ஆங்கில திறன்களை வளர்க்க, ‘லெவல் அப்’ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.