கான்பூர்:
ஜே.இ.இ.-, அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகளின்படி, டில்லி மண்டலத்தைச் சேர்ந்த ரஜித் குப்தா பொது தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். முதல் 10 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாடு முழுதும் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி.,க்களில் சேர பொது நுழைவுத் தேர்வான ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 18ம் தேதி நடந்த தேர்வை, 1.80 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதற்கான முடிவுகளை ஐ.ஐ.டி., கான்பூர் நேற்று வெளியிட்டது.