அண்மையில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ பாடல் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், அவருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கப்படுமா என்ற கேள்வி தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இசையின் மீது எப்போதுமே தனி பிரியம் இருக்கிறது. முந்தைய தலைமுறை இசைக் கலைஞர்களை கொண்டாடுவதில் தொடங்கி இளம் தலைமுறை இசையமைப்பாளர்களுக்கு வரவேற்பு அளிப்பது வரை ஒரு அடி முன்னணியில் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கின்றனர்.