ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொலைக்காட்சிகளில் புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
சன் தொலைக்காட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்-1-ம் தேதி காலை 11 மணிக்கு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்த அயலான் படம் ஒளிபரப்பாகிறது. மதியம் 3 மணிக்கு அஜித், தமன்னா நடித்த அதிரடி படமான வீரம் ஒளிபரப்பாகிறது. விஜயதசமியான அக்.2-ம் தேதி காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர் நடித்த ருத்ரன் திரைப்படமும், மதியம் 3 மணிக்கு விஷால், சுனைனா நடித்த லத்தி திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.1-ம் தேதி காலை 11.30 மணிக்கு அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான டிஎன்ஏ திரைப்படமும், மாலை 5 மணிக்கு சசிகுமார், சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி திரைப்படமும் ஒளிபரப்பாக உள்ளது. விஜயதசமியான அக்.2-ம் தேதி காலை 11 மணிக்கு பிரதீப் ரங்கநாதன், அனுபமா, கயாடு லோகர் நடித்த டிராகன் படமும், மாலை 4.30 மணிக்கு கமல்ஹாசன், சிம்பு, திரிஷா நடித்த தக் லைஃப்மும் ஒளிபரப்பாக உள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்.1-ம் தேதி காலை 9.30 மணிக்கு சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் திரைப்படமும், காலை 11.30 மணியளவில் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படமும், மதியம் 2 மணிக்கு விஜய் ஆண்டனி நடித்த மார்கன் திரைப்படமும் ஒளிபரப்பப்பட உள்ளது. விஜயதசமியான அக்.2-ம் தேதி காலை 9.30 மணிக்கு அருள்நிதி, பிரியா பவானி சங்கர் நடித்த டிமாண்டி காலனி 2 திரைப்படமும், மதியம் 2 மணிக்கு ஹவுஸ்மேட்ஸ் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
