கமல்ஹாசனின் கருத்து கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்றும், நிலைமையை சரி செய்ய அவர் மன்னிப்பு கோரி இருக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம். நாகபிரசன்னா தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.