தமிழ் சினிமா நடிகர்களில் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையை விஜய் பெற்றுள்ளார்.
பொதுவாக தமிழ் சினிமா நடிகர்கள் அவர்களுக்குள் மோதிக் கொள்வார்களோ! இல்லையோ? ஆனால் அவர்களின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சோசியல் மீடியாக்களில் தான் சரமாரியாக மோதிக் கொள்வார்கள். “கசட,தபற… வார்த்தைகளில் திட்டியும் கொள்வார்கள்…”
பெரும்பாலான சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைத்தலங்களில் தனக்கென ஒரு பக்கத்தை வைத்து அவ்வப்போது போட்டோக்கள், வீடியோக்கள் பதிவிட்டு வருவது வழக்கம்.
நடிகைகள் கலக்கல்; நடிகர்கள் சிக்கல் :-
சினிமா நடிகையென்றால் தனது கலக்கல் கிளாமர் படங்களை தொடர்ந்து அப்லோட் செய்து தனது ரசிகர்களுக்கு தாங்கள் இருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்தி வருவார்கள். ஆனால் நடிகர்கள் அப்படி இல்லை. தனது சினிமா படம் குறித்த முக்கிய அப்டேட்ஸ் மட்டும் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள். தற்போது புதிய செய்தி என்னவென்றால் நடிகர் விஜய் தனது இன்ஸ்டாகிராம் (14.6M) பக்கத்தில் அதிக ஃபார்வேர்ஸ்-களை கொண்ட தமிழ் நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சிம்புவை முந்திய விஜய் :-
சிம்பு தான் இன்ஸ்டாகிராமில் (14.4M) தமிழ் சினிமா நடிகர்களில் அதிக ஃபாலோவர்ஸ் கொண்ட நடிகர் என்ற சாதனையை நீண்ட காலமாக தக்க வைத்திருந்தார். தற்போது அவரைவிட 20,000 ஃபாலோவர்ஸ்-கள் அதிகம் பெற்று விஜய் நம்பர்.1 இடத்தை பெற்றுள்ளார்.
இவர்களுக்கு அடுத்தபடியாக நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.