பாமகவை வைத்து அப்பா ராமதாசும், மகன் அன்புமணியும் நிறைய சம்பாதித்து விட்டார்கள். ஆனால் அவர்களை நம்பி இருக்கும் கட்சியினருக்கும், சொந்த சமூகத்தினருக்கும் என்ன இருக்கு என்று மக்களே! இன்று கேட்கிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சியில் அப்பா ராமதாஸ் ஒரு பக்கமும், மகன் அன்புமணி ஒரு பக்கமும் என பாமக கட்சி 2ஆக பிரிந்து உள்ளது. ஆனால் கட்சி அதிகாரப்பூர்வமாக ராமதாஸ் கைவசம் தான் உள்ளது என்றும், கட்சி நிர்வாகிகள் அவர் சொல்வதை தான் கேட்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இருப்பினும், ஒரு சில நிர்வாகிகள் அன்புமணி பக்கமும் உள்ளனர். ஆகையால் வரும் 2026 தேர்தலின் போது கட்சி ராமதாஸ் பக்கம் இருக்குமா? அல்லது அன்புமணி பக்கம் இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நீக்கப்பட்ட மகனின் ஆதரவாளர்கள்:-
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்களால் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அது மட்டும் இல்லாமல் அன்புமணி ஆதரவாளர்களான வழக்கறிஞர் பாலு, திலகபாமா உள்ளிட்ட பல நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அப்பா-மகன் சேர்த்த சொத்துக்கள்:-
அப்பா ராமதாஸ்; மகன் அன்புமணி இருவர் மேல் உள்ள குற்றச்சாட்டுகள் என்னவென்றால் கட்சியை வைத்தும், வன்னியர் சங்கத்தை வைத்தும் இருவரும் நன்றாக சம்பாதித்து விட்டார்கள். பல வீடுகள், சொகுசு பங்களாக்கள், விலையுயர்ந்த கார்கள், ரியல் எஸ்டேட் தொழிலில் கோடிக்கணக்கில் வருமானம் கிலோ கணக்கில் தங்க நகைகள், வைரங்கள் என நிறையவே சொத்துகள் சேர்த்து விட்டார்கள்.
நம்பியவர்களுக்கு என்ன?
பாமக கட்சியினருக்கும், அவர்களை நம்பி இருக்கும் இளைஞர்களுக்கும், அவர்கள் குடும்பத்தினருக்கும், சொந்த சமூகத்திற்கும் என்ன செய்தார்கள்? என்று பலர் கேள்வி கேட்கும் நிலைமையில் தான் உள்ளது. ஆனால், அவர்கள் பண்ணை வீடு, வாசல், நிலம், சொத்து என பல சொத்துக்கள் சேர்த்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது. இந்த நிலையில் பாமக தலைவர் ராமதாஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார்? 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் பலமாக எழுந்துள்ளது.
எது எப்படியோ! தேர்தல் நெருங்கும் போது அப்பா ராமதாஸும், மகன் அன்புமணியும் இணைந்து விடுவார்கள் என்ற கிசு…கிசு… பாமக மத்தியில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.