வெள்ளித்திரை நடிகைகளை விட, சீரியல் நடிகைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் வழியாக கவர்ச்சியா?
இன்றைய காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை விட சீரியல் நடிகைகளுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகரித்து வருகிறார்கள். அதற்கு மூல காரணமாக இருப்பது இன்ஸ்டாகிராம் தளத்தில் சீரியல் நடிகைகள் காட்டும் கவர்ச்சி என்று சொல்லப்படுகிறது. தங்களை விதவிதமான கோணங்களில், விதவிதமான டிரஸில் போட்டோக்கள் எடுத்து அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் வேலையில் நடிகைகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.
சீரியலிலும் கவர்ச்சியா..?
பொதுவாக சீரியல் என்றால் 8-முழம் சேலையை இறுக்க சுற்றி, நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்து, குத்து விளக்கு ஏற்றும் காட்சிகளில் நடித்து குடும்ப-பாங்கான பெண்ணென தன்னை காட்டிக் கொண்டு நடிப்பார்கள். ஆனால் தற்போது சீரிகளிலும் அதிக கவர்ச்சி கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
குவியும் ரசிகர்கள்:-
நம்ம சின்னத்திரை நடிகைகளுக்கு தற்போது சீரியல்களுக்கும் தனி “ஃபேன்ஸ் கூட்டம்” உருவாகியுள்ளது. இதனால் சீரியல் நடிகைகளின் சம்பளமும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
எது எப்படியோ! “இன்று சின்னத்திரை: நாளை வெளித்திரை” என திட்டமிட்டு செயல்படும் சீரியல் நடிகைகளுக்கு சம்பளத்தில் எந்த குறைவும் இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோலிவுட் வட்டாரம் வரை கிசுகிசுக்கப்படுகிறது