இன்பநிதியின் அரசியல் பயணம் : வெளியான சுவாரஸ்ய தகவல்..!

திமுக தலைமையின் அடுத்த தலைமை; ரெட் ஜெயிண்ட் படத் தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ; கலைஞர் தொலைக்காட்சியின் புதிய நிர்வாகி என்று அறியப்படும் இன்பநிதியின் அரசியல் பயணங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இன்பநிதி அப்பா பற்றி தெரியுமா?

இன்பநிதி யார்? என்று பார்ப்பதற்கு முன், அவரது அப்பா உதயநிதி ஸ்டாலினை பார்த்து விடுவோம்.

2008ஆம் ஆண்டு “குருவி” படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார், உதயநிதி ஸ்டாலின். பிறகு 2011ஆம் ஆண்டு “ஒரு கல் கண்ணாடி” என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். தொடர்ந்து, பல படங்களில் நடித்தார், “விண்ணைத்தாண்டி வருவாயா, மைனா உள்ளிட்ட பல படங்களை விநியோகமும் செய்தார்.

அரசியலில் வேகமாக வளர்ந்த அப்பா:-

அதன்பிறகு, 2018ஆம் ஆண்டு முதல் முழுநேர அரசியலில் ஈடுபட்ட, உதயநிதி, 2019ஆம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

மக்கள் எதிர்பார்த்ததைப்போல 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். 2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்று அமைச்சர் அவையில் முக்கிய அங்கம் வகித்தார். அடுத்து என்ன என்று எதிர்பார்த்த மக்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் சென்ற ஆண்டு துணை முதல்வராக உதயநிதி அறிவிக்கப்பட்டார்.

பின்னால் இருப்பது துர்கா ஸ்டாலினா..?:-

உதயநிதியின் அரசியல் பயணங்களை அவர் அம்மா துர்கா ஸ்டாலின் தான் திட்டமிடுகிறார்கள் என்றும், உதயநிதி திறமையால் வரவில்லையே! அவர் அப்பாவை வைத்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். மற்றபடி திறமை; அறிவுத்திறன் என சொல்லும்படி என்ன உள்ளது? என்று மக்களும் கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.

தொழிலை கைப்பற்றிய இன்பநிதி:-

இப்போது இதே நிலையில் தான் இருக்கிறார் இன்பநிதி. கால்பந்தாட்ட வீரர், வெளிநாட்டுக்கு சென்று பட்டப்படிப்பு முடித்தவர். இன்று அவருக்கு, ரெட் ஜெயிண்ட் படத் தயாரிப்பு நிறுவனத்திலும்; கலைஞர் தொலைக்காட்சியிலும் முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. தனுஷ் இயக்கிய, நடிக்கும் “இட்லி கடை” படத்தின் மூலம் விநியோகஸ்தராக அறிமுகமாகிறார், இன்பநிதி. இவரின் அரசியல் பயணம் குறித்த சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.

அரசியல் பிரவேசம்:-

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் நேரடியாக பிரச்சாரத்தில் இன்பநிதி இடம்பெறுவார் என்றும் அதன்மூலம், மெல்ல,மெல்ல அரசியலுக்குள் நுழைய திட்டப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று திமுகவினர் உறுதியாக உள்ளனர். அந்த தேர்தலுக்கு பிறகு மெல்ல, மெல்ல இன்பநிதியை திமுகவில் பொறுப்புகள் வழங்கி, உயர்மட்ட அளவுக்கு கொண்டு செல்லும் வகையில் துர்கா ஸ்டாலினும், இன்பநிதியின் அம்மா கீர்த்திகா உதயநிதி அவர்களும் திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வாரிசு அரசியல் பயணம் தொடர்கிறது….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *