ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உடல்நலன் பாதிக்கப்பட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி. திமுக துணைப்பொதுச்செயலாளரான இவர், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வருமானத்திற்கு அதிகான சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு விசாரணையில் உள்ளது. இதனிடையே கடந்த மாதம் இவரது வீடு, அலுவலகம் மற்றும் இவரின் மகன் வீடு, அலுவலகம் உள்ளிட்டவற்றில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர ஐ.பெரியசாமியை அவரது குடும்பத்தினர் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்துள்ளனர். வயிறு தொடர்பான பிரச்னை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *