மாரி செல்வராஜ் இயக்கிய ‘பைசன்’ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பைசன்’. கபடி வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகயை முன்னிட்டு வெளியான இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
இந்த நிலையில், ‘பைசன்’ படத்தை பார்த்த திரைப்பிரபலங்கள் பலரும் இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், ‘பைசன்’ படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” சூப்பர் மாரி சூப்பர் ‘பைசன்’ பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்” என்று பாராட்டினார். ‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ பார்த்துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான ‘பைசன்’ (காளமாடன்) பார்த்து விட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும், என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
